#BREAKING நாளை முதல் தீவிர ஊரடங்கு.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!
நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளின்றி முழு ஊரடங்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நாளை முதல் ஒரு வாரத்துக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முமு ஊடரங்கு நாளை அமல்படுத்துவதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.