வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள காலக்கட்டத்தில் அதனை எப்படி  எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது எப்படி  என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  தலைமைச் செயலக்த்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்க்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்lத முதலைச்சர் பேசியதாவது.  

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள காலக்கட்டத்தில் அதனை எப்படி  எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுக்க முன்வந்துள்ளது. மக்களுக்கு, விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், அரசின் செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அத்தியாவசிய துறைகள் மூலம் வடகிழக்கு பருவ மழை காலக்கட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மரங்கள் சாய்ந்தால் அதனை அப்புறப்படுத்த பயன்படும் கருவி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைக்கவும், சுகாதாரத்துறை மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கவும், மழை நீர் தேங்காமல் வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப கருவிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களை மீட்க முடியும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. வருவாய் துறை மூலம் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு உதவ வருவாய்த்துறையும், மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவ மழை மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூக இடைவெளி, முககவசம் கட்டாயம் அணிந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. 90% தளர்வுகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்களுக்கு செல்லும் போது அரசின் நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று நோய் என்பதை அறிந்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.