Asianet News TamilAsianet News Tamil

ஜெ. மரணம் குறித்த விசாரணை கமிஷன் வரவேற்கதக்கது - அப்போலோ நிர்வாகம் அறிக்கை...

Chief Minister Edappadi Palanisamys announcement that the inquiry commission will be set up on Jayalalithaas death
Chief Minister Edappadi Palanisamys announcement that the inquiry commission will be set up on Jayalalithaas death
Author
First Published Aug 17, 2017, 8:08 PM IST


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கதக்கது எனவும், விசாரணையில் தங்களின் சிறப்பான சிகிச்சை குறித்த உண்மை வெளிவரும் எனவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.
இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதைதொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கதக்கது எனவும், விசாரணையில் தங்களின் சிறப்பான சிகிச்சை குறித்த உண்மை வெளிவரும் எனவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் சிறப்பான சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios