முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழிவு வந்து விட்டது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். முன்னதாக தமிழகத்தில் மரங்களை அழித்ததே பட்டாளி மக்கள் கட்சியினர் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார். பாமகவின் மரம் நடும் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இயற்கை வளங்களை சூறையாடியது பாமக தான் எனக் கூறினார். 

இதற்கு பதிலளித்து அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழிவு வந்து விட்டதாக கூறினார். சமூக நிதிக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என எச்சரித்தார். மத்திய அரசு கொள்கை மாநில அரசுக்கு எதிராக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ் படித்தவர்கள் மருத்துவம் படிக்க முடியாது என்றால் பின்பு ஏன் அனைத்து மொழியிலும் தேர்வு நடத்துகிறது என சி.பி.எஸ்.சி.க்கு கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும் தமிழக அரசு பாதுகாக்க தவறும்பட்சத்தில் ஆட்சியை இழக்க நேரிடும் என எச்சரித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.