Asianet News TamilAsianet News Tamil

எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தி மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.!

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

Chief Minister Edappadi Palanichamy mourns the death of Border Security Force Havildar Thirumurthy!
Author
Tamil Nadu, First Published Aug 1, 2020, 11:20 PM IST

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chief Minister Edappadi Palanichamy mourns the death of Border Security Force Havildar Thirumurthy!

 திருமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...  "ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தவர்.இவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். எல்லை பாதுகாப்பு படை, 173-வது படைப்பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி, 25.7.2020 அன்று  எதிர்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 31.7.2020 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகுந்த துயரம்  அடைந்தேன்.உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான்  உத்தரவிட்டுள்ளேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios