சிதம்பரம் தொகுதிக்கு தான் நிறைவேற்றி தருகிறேன் என்று சொன்ன வாக்குறுதிகளில் ஐந்து சதவீதத்தை கூட சந்திரகாசி நிறைவேற்றவில்லையாம். ’தேர்தல் நேரத்துல கொடுத்த வாக்குறுதிகளான அரசு மருத்துவக்கல்லூரி, ஜெயங்கொண்டத்தில் என்.எல்.சி. அனல் மின் நிலையம், அரியலூரில் ரயில்வே மேம்பாலம், குன்னத்தில் பீங்கான், சிமெண்ட் தொழிற்சாலைகள், மருதையாறு நீர் தேக்கத் திட்டம்....’ இதெல்லாம் என்னாச்சு எம்.பி.? சிதம்பரம் திருச்சி நெடுஞ்சாலைத்திட்டத்தை தவிர வேற எதையுமே செய்யாத இவரு எம்.பி.யே கிடையாது.’ என்று போட்டுத் தாக்கியிருக்கின்றனர் எதிர்கட்சிகள்.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் சந்திரகாசியோ ஒட்டுமொத்த பழியையும் தன் கட்சி மீது தூக்கிப் போடுகிறார் இப்படி...”தனியார் முந்திரித் தொழிற்சாலை இருப்பதால் அரசு முந்திரித் தொழிற்சாலை அமைக்க முடியவில்லை. மாநில அரசின் திட்டங்களை லோக்கல் எம்.எல்.ஏ.க்கள் செய்வார்கள். இதில் நான் தலையிடுவதில்லை. இதை வெச்சுக்கிட்டு, ‘எம்.பி.யை பார்க்க முடியலை’ன்னு மக்கள் சொல்றாங்க. உண்மையில் எங்க கட்சியில எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மரியாதையும், பிரதிநிதித்துவமும், அதிகாரமும் தந்து பணியாற்ற வெச்சால்தானே நாமளும் சாதிக்க முடியும்?  நான் சொல்றதை மத்திய அரசும் கேட்கும்!

சூழல் இப்படி இருக்கிற நிலைமையில என்னால மக்களுக்கு என்ன பண்ணிட முடியும்? உருப்படியா எதையும் செய்ய முடியாத நிலையையும் தாண்டி சொந்த முயற்சியிலதான் போராடி ஓவ்வொன்னையும் பண்ணிட்டிருக்கேன்.” என்றிருக்கிறார்.

சர்தான், எலெக்‌ஷன் டைம்ல சந்திரகாசி மாதிரியான அதிருப்தி எம்.பி.க்களால் எடப்பாடி தரப்புக்கு சிக்கல் உருவாகும்ங்கிறது தெளிவா புரியுது.