காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரதை ரஜினிகாந்த் ரகசியமாக சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் சாராதவர் என்று கூறப்பட்டாலும் அரசியல் விமர்சகர் மறைந்த சோவுக்கு நெரும்கிய நண்பர்.
மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு நெருக்கமானவர். சமீபத்தில் பிரதமர் மோடி கொண்டுவந்த செல்லாத நோட்டு அறிவிப்பை முதலில் வரவேற்று அறிக்கை விட்டு பொதுமக்களின் கடுப்புக்கு ஆளானவர்.
பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்று ரஜினியை அறிந்தவர்கள் கூறுவதுண்டு இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த சனி அன்று அவரது இல்லத்துக்கு சென்று ரகசியமாக சந்தித்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பல விசயங்களை பேசியுள்ளனர்.
ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பிரதமர் மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பை கடுமையாக எத்ரித்து வருபவர்.
மத்திய நிதியமைச்சராவும் பொருளாதார வல்லுனர்கவும் இருக்கும் சிதம்பரம் மோடியின் செல்லாத அறிவிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் தோலுரித்து வருகிறார்.
அவரது அறிக்கைகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவே உள்ளது.
செல்லாத நோட்டு அறிவிப்பின் முடிவு வர இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நாட்டில் பணபுழக்கம் கடுமையாக பாதித்து பொதுமக்கள் கடுமையான பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.
எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு பெறாத மோடியின் அறிவிப்பை ஆரம்பத்தில் ஆதரித்த ரஜினிகாந்த் கடுமையான எதிர்ப்பை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் மோடி அரசுக்கு எதிராக பேசி வரும் சிதம்பரத்தை நடிக ரஜினிகாந்த் ரகசியமாக சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் எண்ணத்திலும் மாற்றம் வர துவங்கியதன் அறிகுறியோ இது என்று அரசியல் விமர்சர்கர்கள் கருதுகின்றனர்.
