Chidambara tweet abour the enquiry of sc
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்றும், தான் எடியூரப்பாவாக இருந்தால் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை முதலமைச்சராக பொறுப்பேற்க மாட்டேன் எனவும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், நான் எடியூரப்பாவாக இருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும் என்றும், 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவே எடியூரப்பா குறிப்பிட்டு இருப்பார். ஆளுநரின் அழைப்பு கடிதத்திலும் எடியூரப்பா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார் .
