Asianet News TamilAsianet News Tamil

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்.. அரசு நிலைப்பாடு இதுதான்.. அமைச்சர் எ.வ.வேலு கூறியது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய மயிலம் சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார், சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

Chennai - Salem 8 route project .. This is the position of the government... minister e v velu
Author
Chennai, First Published Apr 13, 2022, 11:52 AM IST

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த போது இருந்த நிலைப்பாடுதான் தற்போதும் இருக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

8 வழிச்சாலை அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய மயிலம் சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார், சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

Chennai - Salem 8 route project .. This is the position of the government... minister e v velu

ஒரே நிலைபாடு தான்

இதற்குப் பதில் அளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு;- "சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது இத்திட்டம் குறித்து மக்களின் கருத்துக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதே நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்துக் கேட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Chennai - Salem 8 route project .. This is the position of the government... minister e v velu

சாலைகளை மேம்படுத்தச் சாலைப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாநில அரசின் நிதிநிலை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான். உரியக் காலம் வரும்போது சாலைப் பணியாளர்களைத் தேர்வு செய்து முதல்வர் அனுமதி வழங்குவார்" என்று தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios