Asianet News TamilAsianet News Tamil

வேணாய்யா! விட்டுடுங்கய்யா! முடியலைங்கய்யா: துணை ஜனாதிபதியிடம் கெஞ்சும் சென்னை போலீஸ்.

Chennai Police to appeal to Vice President
Chennai Police to appeal to Vice President
Author
First Published Jan 26, 2018, 12:15 PM IST


துணை ஜனாதிபதியானதும் ஏழுமலையான் கோயில் தரிசனத்தை முடித்த கையோடு ‘இனி எனக்கு அரசியலோடு எந்த தொடர்புமில்லை.

நான் தேச மக்களுக்கு பொதுவானவன்.

Chennai Police to appeal to Vice President

மக்கள் நலனே என் பணி’ என்று அறிவித்த வெங்கய்யா நாயுடுவின்  சமீபத்திய நடவடிக்கைகளால் சென்னை காவல்துறையும், கோட்டை அதிகாரிகளும் வருத்தத்தில் நெளிகிறார்களாம்.இதுதான் பிரச்னை!...

வெங்கய்யா நாயுடு அடிக்கடி சென்னைக்கு சுற்றுப்பயணம் வருகிறாராம். துணை ஜனாதிபதி எனும் வகையில் மிக உயர்ந்த பாதுகாப்பு வளையத்தில் அவர் இருப்பதால் அவருக்கு பெரும் போலீஸ் படையை பாதுகாப்புக்கு இறக்க வேண்டியிருக்கிறதாம்.

இதனால் ரொட்டீன் பாதுகாப்பு பணிகளில் பெரும் தொய்வு ஏற்படுகிறதென்று சங்கடப்படுகிறார்களாம் சென்னை போலீஸ் அதிகாரிகள். விசேஷ காலங்களில் ஏதாவது வைபவங்களில் கலந்து கொள்ல வெங்கய்யா நாயுடு சென்னை வருவதால், ட்ராஃபிக்கை நிறுத்துவதும், மக்களை காக்க வைப்பதும் பெரும் அசெளகரியத்தை தருவதாக தமிழக அரசு தரப்பில் குறையாக நினைக்கப்படுகிறதாம்.

Chennai Police to appeal to Vice President

சென்னையில் செட்டிலாகியிருக்கும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்த மக்கள் அழைக்கும் விழாக்களில் கலந்து கொள்ள உடனடியாக சம்மதம் தெரிவிக்கிறாராம் துணை ஜனாதிபதி. ஆக அடிக்கடி அவர் வரும்போதெல்லாம் உச்சகட்ட பாதுகாப்பை கொடுப்பது பெரிய பளுவாக இருப்பதாக உணர்கிறார்களாம் போலீஸார்.

இந்த சிரமம் போலீஸோடு முடிந்துவிடுவதில்லை, துணை ஜனாதிபதி வருகையில் புரோட்டோகால் படி அவரை வரவேற்கவும், உபசரிக்கவும் முக்கிய அரசு அதிகாரிகள அவரது பயணத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. இதனால் கோட்டை அதிகாரிகளும் ஆதங்கப்படுகின்றனராம்.

இப்படி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் தொடர் சென்னை விசிட்டால் சென்னை போலீஸ் மட்டுமில்லாது உயரதிகாரிகளும் சிரமப்படுவதாக மீடியாக்களில் தகவல் பரவி வருவது டெல்லியின் கவனத்துக்கும் போயிருக்கிறதாம்.

Chennai Police to appeal to Vice President

இந்நிலையில், அடிக்கடி சென்னைக்கு  வெங்கய்யா நாயுடு விசிட் அடிப்பதால் கவர்னரும் அடிக்கடி பரபரப்புக்கு சிரமப்பட்டு ஆளாகிறார் என்று ஏற்கனவே ஒரு தகவல் பரவியதையும் அண்டர்லைன் செய்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios