chennai high court order against radhika and sarathkumar

இது என்ன மாயம் திரைப்படத்தை தயாரிப்பதற்காக, நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ரேடியன் நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு 2.5 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தத் தொகையை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திரும்ப அளிப்பதாக இருவரும் உறுதிமொழி அளித்திருந்தனர். பணத்தை திரும்ப அளிக்காத பட்சத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையையும், அல்லது புதிதாக எடுக்கக் கூடிய படத்தின் உரிமையையும் அளிப்பதாக ராதிகா, சரத்குமார் ஒப்புதல் அளித்திருந்தனர்.

ஆனால் குறிப்பிட்ட தேதியில் பணத்தை திரும்ப அளிக்காததாலும், இது என்ன மாயத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட பாம்பு சட்டை திரைப்படத்தின் உரிமையை வழங்காததாலும் ராதிகா, சரத்குமார் ஆகியோர் மீது ரேடியன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராதிகா சரத்குமார் அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மேலும் இது குறித்து இருவரும் பதிலிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜுன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.