Asianet News TamilAsianet News Tamil

நீதி மன்றத்திடமே தன் சேட்டையை காட்டிய மீரா.. ஜாமினில்வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி.

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் என பலருக்கும் டுவிட்டரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என டேக் செய்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் அவர். இந்நிலையில்தான் பட்டியல் இனத்தவர் குறித்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பானது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

Chennai Court has issued a non-bailable Arrest warrant against actress Meera Mithun for not appearing in court.
Author
Chennai, First Published Mar 24, 2022, 10:48 AM IST

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் கைதாகி ஜாமினில் இருந்து வரும் நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு  ஆஜராவதை தவிர்த்ததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வாய் துடுக்கு,  சர்ச்சைகளின் மறு உருவம் என்று ஒரு நடிகையை சொல்ல வேண்டுமென்றால் அது மீரா மிதுனுக்கே பொருத்தமாக இருக்கும். தென்னிந்திய அழகி என அடிக்கடி பில்டப் செய்துகொள்ளும் அவர் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் இருந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் அவர். அந்நிகழ்ச்சியில் சேரன் தன்னை கட்டிப்பிடித்து தகாத இடத்தில் கை வைத்தார் என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையை தொடர்ந்து போட்டியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு தனது அரை நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி பலரின் விமர்சனத்திற்கும் ஆளானார். அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறி பலரின் கவனத்தை ஈர்ப்பது அவரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Chennai Court has issued a non-bailable Arrest warrant against actress Meera Mithun for not appearing in court.

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் என பலருக்கும் டுவிட்டரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என டேக் செய்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் அவர். இந்நிலையில்தான் பட்டியல் இனத்தவர் குறித்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பானது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் கேரள மாநிலத்தில் பதுங்கினார். ஆனாலும்இடையிடையே போலீசாருக்கு சவால் விடும் வகையில்  வீடியோ வெளியிட்டும் வந்தார். விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை, அதுகுறித்து எந்த தகவலும் இல்லாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Chennai Court has issued a non-bailable Arrest warrant against actress Meera Mithun for not appearing in court.

வெளியில் பல சேட்டைகள் செய்து வரும் மீரா மிதுன் தற்போது நீதிமன்றத்திடமே தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதனால்தான் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் போலீசார் அவரை விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios