தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது ,  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார்  527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதில் சென்னையில் மட்டும் சுமார் 266 பேர் என பதிவாகியுள்ளது ,  இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது ,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 30 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 1,409 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் .  இதுவரை தமிழகம் முழுவதும் சுமார இரண்டாயிரத்து நூற்று எழு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

  

இந்நிலையில்  மே 5 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி  சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் மொத்தம் 1724 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அதில் அதிகபட்சமாக திருவிக நகரில் சுமார் 357 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ராயபுரத்தில்  299 பேருக்கும்,  கோடம்பாக்கத்தில் 257 பேருக்கும்  தேனாம்பேட்டையில்  206 பேருக்கும் அண்ணாநகரில் 144 பேருக்கும் தண்டையார்பேட்டையில் 136 பேருக்கும் வளசரவாக்கத்தில் 114 பேருக்கும் அம்பத்தூரில் 67 பேருக்கும் அடையாரில் 44 பேருக்கும் திருவெற்றியூரில் 29 பேருக்கும் மாதவரத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .மணலி , ஆலந்தூர் ,  சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தலா 10 பேருக்கும் பெருங்குடியில் 12 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது

இதில் சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில்  மே 5ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி ,  சுமார் 264 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் ,  இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 28 பேரும் , திருவிக நகரில் 40 பேரும் ,  தண்டையார்பேட்டையில் 33 பேரும் தேனாம்பேட்டையில் 26 பேரும் கோடம்பாக்கத்தில் 24 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் மே மாதம் 5 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களை பொருத்தவரையில் சுமார் 1,437  பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,  இதுவரை சென்னை மண்டலத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் ,  அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .