Asianet News TamilAsianet News Tamil

சென்னை மாநகராட்சியில் நேயாளிகளை அதிவிரைவில் கண்டறியும் கருவி...!! கொரோனாவுக்கு முடிவுரை..!!

200 கோட்டங்களிலும் ஒரு கோட்டத்திற்கு இரண்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் என 680 மருத்துவ முகாம்கள் மூலம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
 

Chennai corporation gave 10 thousand hot meter and  Pulse Oxymeter
Author
Chennai, First Published Jun 18, 2020, 5:36 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவும், மருத்துவ முகாம்களில் பயன்படுத்துவதற்காகவும் காய்ச்சலை கண்டறியும் 10,000 வெப்பமானி மற்றும் ஆயிரம் Pulse Oxymeter வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக 15-6-2020 முதல் காய்ச்சல் முகாம் சென்னையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 200 கோட்டங்களிலும் ஒரு கோட்டத்திற்கு இரண்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் என 680 மருத்துவ முகாம்கள் மூலம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. 

Chennai corporation gave 10 thousand hot meter and  Pulse Oxymeter

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று பரிசோதனைகள்  மேற்கொள்வதற்காகவும், மருத்துவ முகாம்களில் பயன்படுத்துவதற்காகவும் 1 முதல் 15 மண்டலங்களுக்கு 10,000 காய்ச்சலை கண்டறியும் வெப்பமானி, கோட்ட நல மருத்துவ அலுவலர், வீடுகள்தோறும் சென்று கணக்கெடுக்கும்  களப்பணியாளர்கள், கண்காணிப்பு மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளை தொடாமல் அதிவிரைவில் நோயாளிகளின் வெப்ப நிலையை கண்டறிந்து வெப்ப நிலை அதிகம் உள்ளவர்களுக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறது.  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வீடுகள்தோறும் சென்று கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் Pulse Oxymeter வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Chennai corporation gave 10 thousand hot meter and  Pulse Oxymeter

முதற்கட்டமாக 1,000 Pulse Oxymeter தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திருவிக நகர் ஆகிய மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மீதமுள்ள அனைத்து மண்டலங்களுக்கும் Pulse Oxymeter வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ முகாம்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் பிரிவிற்கு சிகிச்சைக்கு வருபவர்களில் நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலம் உடனடியாக நோயின் தாக்கம் கண்டறியப்படுகிறது. இந்த உபகரணங்களின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படின் பரிந்துரைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios