அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் இ.மகேந்திரனின் மகளின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா நினைவிடம் எப்படியும் திறந்தாக வேண்டும். அப்போது சென்று மரியாதை செலுத்துவோம். தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை மக்கள் அலைகடலேன வரவேற்பு அளிக்க உள்ளனர். சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பால் யாருக்கும் கெட்டப் பெயர் ஏற்படாமல் பார்தது கொள்ள வேண்டும். சசிகலாவின் வருகையை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

யார் மன்னிப்பு கேட்க வேண்டும்? யார் மன்னிக்கப்பட வேண்டியர்கள்? என்பதை காலம் பதில் சொல்லும். டிடிவி மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலனை என கே.பி.முனுசாமி கூறியதற்கு பதிலளித்துள்ளார். திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பது தான் அமமுகவின் எண்ணம் என்றார். அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார். 

அதிமுக ஜனநாயக அமைப்பை அமமுக மீட்டெடுக்கும். நிச்சயமாக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து நம்மை வழி நடத்துவார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.