மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதை ரஜினிகாந்த் பாராட்டினாலும், ராகுல்காந்தியையும் விட்டுக் கொடுத்து பேசவில்லை நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தில் பாஜக வெறுப்பு நிலை உள்ளதால் காங்கிரஸ் கட்சியுடனும் நட்புபாராட்ட நினைத்தே ராகுல் பதவி விலகத் தேவையில்லை ரஜினி ஆறுதலாக பேசியதாகக் கூறப்படுகிறது.

 

ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசும்படி ரஜினியிடம் கேட்டுக் கொண்டதே பிரியங்கா காந்தி தான் எனக் கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராகுல் அறிவித்தார். ஆனால் அவரது முடிவை, காங்கிரஸ் செயற்குழு நிராகரித்து விட்டது. ஆனாலும் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.

 

தேர்தலுக்கு முன் பாஜகவை கடுமையாக சாடி வந்த மு.க.ஸ்டாலின் மோடி ஆட்சி அமைத்து விட்டதால் அவரை விமரிப்பதை சுத்தமாக நிறுத்திக் கொண்டார். இது ஸ்டாலின் மீது காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மு.க.ஸ்டாலினுக்கு, செக் வைக்க, ரஜினியின் உதவியை பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி தலித் சமுதாய தலைவர் ஒருவரை அனுகி ரஜினியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார் அந்த தலைவர். 

அப்போது, 'ராகுல் காந்தி மனமுடைந்து காணப்படுகிறார். அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் பேச வேண்டும்' என ப்ரியங்கா காந்தி விரும்புகிறார் எனக் கேட்டிருக்கிறார். அதன் பிறகே மோடியை பாராட்டினாலும் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசியது. தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக் கூடாது. தன்னை அவர் நிரூபித்து காட்ட வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியும் முக்கியம்’’ எனப் பேசினார் ரஜினிகாந்த். அதன்பிறகே மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை தொலைபேசியின் அழைத்து 'தேர்தலில் தோற்றாலும், மக்கள் மனங்களை, நீங்கள் வென்று விட்டீர்கள். எனவே,காங்கிரஸ் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை கைவிட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.

 

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விட்டால், ரஜினி துவங்க உள்ள கட்சியுடன் கைகோர்க்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பாஜக எதிர்ப்பு அலையை அறிந்துள்ள ரஜினிகாந்தும் அதற்கு சம்மதிக்கலாம் என்றே கூறப்படுகிறது.