அமெரிக்காவில் வசிக்கும் நபருக்கு சொந்தமான 6 கோடிரூபாய் மதிப்பிலான இடத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்றவர் மீது புகார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் பிரபு ராஜா என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உணவுக்கடை நடத்தி வருகிறார். இந்த கடை செயல்பட்டுவரும் கட்டிடத்தின் உரிமையாளர் சுந்தரகணேஷ் என்பவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் வியாபாரத்தில் தொய்வு ஏற்படவே செந்தில் என்பவருடன் பிரபுராஜா கடையை கவனித்துக் கொள்ளுமாறு ஒப்படைத்ததுடன் லாபத்தில் 10 விழுக்காடு தரவேண்டும் என வியாபார ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவே படைப்பாளன் எனும் திரைப்படத்தை இயக்கியும் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு காரணங்களுக்காக மும்முரத்தில் இருந்த பிரபுராஜாவுக்கு தெரியாமல் செந்தில், சிவக்குமார் என்பவருடன் சேர்ந்து உரிமையாளர் சுந்தரகணேஷ் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 6 கோடி மதிப்பிலான 3000 சதுர அடி கடையை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்றுள்ளார். 

இதனை அறிந்த பிரபுராஜா தனியார் கட்டுமான நிறுவனத்திடம் விசாரித்த போது செந்தில் செய்த முறைகேடுகள் தெரிய வந்தது. இதனை அடுத்து பிரபுராஜா  முதலமைச்சரின் தனிப்பிரிவிலும், மத்திய குற்ற பிரிவிலும் செந்தில், சிவக்குமார் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.  கவனித்து கொள்ளுமாறு ஒப்படைக்கப்பட்ட கடையை  போலீ ஆவணம் தயாரித்து ஒட்டுமொத்தமாக விலைபேசிய விற்பனை செய்துள்ள சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.