முதலமைச்சரின் இலாகாக்கள் மாற்றப்பட்டு ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் சில மாற்றங்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமைசெயலாளர் அழைப்பின் பேரில் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீண்டும் அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் செய்தி உலாவுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல குன்றி மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டு அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர் வகித்து வந்த இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து மேலும் சில மாற்றங்கள் வர உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் பொதுப்பணித்துறை மீண்டும் கே.வி.ராமலிங்கம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் இதற்காக அவர் தலைமை செயலாளரால் அழைக்கப்பட்டு அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசில் 2001 ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கே.வி.ராமலிங்கம். பின்னர் தூக்கியடிக்கப்பட்ட அவர் காணாமல் போனார். முதல்வரின் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ் இன்று தலைமை செயலகம் வர வில்லை, தலைமை செயலரும் வரவில்லை. ஆகவே வேறு எங்காவது ரகசிய இடத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர்.

இதுபற்றி விசாரித்தபோது அப்ப்டி ஒன்றும் இப்போது அவசியம் எழவில்லை. அப்படி பார்த்தால் இந்த நேரத்தில் செங்கோட்டையன் அதே மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறார் அவருக்கு அமைச்சர் பதவி தரலாமே, மேலும் அமைச்சர் பதவி மாற்றம் எனபது முதல்வர் பரிந்துரைக்கும் ஒன்று ஆகவே மீண்டும் மீண்டும் முதல்வர் கையெழுத்திட்டாரா? பரிந்துரைத்தாரா என்ற கேள்விகள் எழும்.
அமைச்சராக ஒருவர் பதவி ஏற்றால் முதல்வருடன் குரூப் போட்டோ எடுப்பது வழக்கம் ஆக்வே இது போன்ற பல சங்கடங்கள் உள்ள நிலையில் இது போன்ற மாற்றங்கள் வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர்.
