அரசனை நம்பி ஹஸ்பெண்டை கைகழுவி ஏமாந்திருந்தாலும் கூட பரவாயில்லை! ரிஸ்க் எடுத்ததுல ஒரு கெத்து இருக்குதுன்னு சந்தோஷப்பட்டுக்கலாம், வாழ்த்தலாம், ஆறுதல் சொல்லலாம். 

பட்! வெறும் பச்சத்தண்ணிய பால்பாயாசமா நினைச்சு ஏமாந்த பயபுள்ளைக மாதிரி கமல்ஹாசனை நம்பி தி.மு.க.வை சீண்டுன காங்கிரஸோட நிலை இன்னைக்கு கசங்குன கத்திரிக்காயாகிடுச்சு ஃப்ரெண்ட்ஸ். 
இன்னா மேட்டர்?...

’மக்களுக்காக கட்சி துவங்குகிறேன். வெற்று அரசியல் என் நோக்கமில்லை!’ அப்படின்னு பகுமானமா பேசி கட்சியை துவக்குன கமல்ஹாசன், கடந்த சில நாட்களாக தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டி தள்ளிக் கொண்டு வந்துவிடும் வேலைகளைத்தான் தெளிவாய் செய்து கொண்டிருக்கிறார். டெல்லியில் ராகுலை இவர் சந்திப்பதும், அதை போட்டோவாக போட்டு காங்கிரஸ் கர்வப்பட்டுக் கொள்வதுமாய் இருந்தது.  கூடவே ‘தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது.’ என்று ஸ்டேட்மெண்டும் விட்டுக் கொண்டிருந்தார்.

 

காங்கிரஸும், கமலும் இணைந்து நடத்தும் இந்த சீண்டல் நாடகத்தால் ஸ்டாலினுக்கு செம்ம்ம காண்டு. ஓவராய் பேசும் கமலின் கருத்தை காங்கிரஸ் மறுக்காததும், டெல்லி பக்கம் கமல் வந்தாலே அவரை வூட்டுக்கு கூப்பிட்டு ராகுல் காஃபி கொடுப்பதும் ஸ்டாலினை ஏகத்துக்கும் எரிச்சலடைய வைத்தது. ஆனாலும் ‘டைம் வரும்டா! உங்களுக்கு டைம்பாம் வைக்கிறேண்டா!’ என்று காத்திருந்தார். 

அவர் நினைத்தது மாதிரியே நேரமும் கூடி வந்தது. யெஸ்! சமீபத்தில் சென்னையில் ஸ்டாலின் வீட்டுக்கே வந்து, விருந்து சாப்பிட்டு அவரை சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ’பிரதமர் மோடியை விட ஸ்டாலின் அரசியலில் துடிப்பானவர்’ என்று புகழாரம் வேறு சூட்டினார். தேசிய அரசியலில் ஸ்டாலினுக்கு பெரிய முக்கியத்துவத்தை நாயுடு கொடுக்க முடிவெடுத்திருப்பதை அவரது வார்த்தைகள் அடிக்கோடிட்டுக் காட்டின. இதுதான் காங்கிரஸ் வயிற்றில் புளியை அல்ல புளியமரத்தையே கரைத்திருக்கிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தங்களுக்கு அதிகப்படியான சீட்களை ஒதுக்காவிட்டால், கமலை வைத்துக் கொண்டு எனர்ஜி கூட்டணி போடுவோம்! எனும் சீனைதான் காங்கிரஸ் போட்டு, தி.மு.க.வை பயமுறுத்தியது. ஆனால்  நாயுடுவின் வருகையும், ஸ்டாலினுடன் அவர் நடத்திய வெளிப்படை மற்றும் ரகசிய பேச்சுவார்த்தைகளும் ராகுலையே ரவுசாக்கிவிட்டன. 

’ஸ்டாலின் ஜி வீட்டில் விருந்து முடிந்த பின் என்ன பேசினார்கள்?’ என்று திருநாவுக்கரசரிடம் ராகுல் கேட்க, அரசரோ பே!பே! என்று முழித்திருக்கிறார். காரணம், நாயுடு வரும் போது ஸ்டாலின் வீட்டில் தானும் இருக்க வேண்டும் என அரசர் விரும்பியதை ஸ்டாலின் தரப்பு ஏற்கவேயில்லை. அங்கு என்ன பேசப்பட்டது என்பதையும் அரசரால் அறிய முடியவில்லை. இதனால் மேலிருந்து அரசருக்கு செம்ம மாத்து. 

கமலை வைத்து ஸ்டாலினிடம் சீன் போட்டது டெல்லி மற்றும் தமிழக காங்கிரஸ். கமலுக்கு அவரோட பொண்ணுங்க ரெண்டு பேரும் கூட கண்டிப்பாக ஓட்டு போடுவாங்க என்று உறுதியில்லாத நிலையில் அம்மாம் பெரிய ஸ்டாலினை அவர்கள் சீண்டியது பெரிய தவறுதான். ஆனால் மோடியையே அல்லையில் அலறவிடும் அதாகப்பட்ட நாயுடுவே ஸ்டாலினின் வீட்டுக்கு வந்து மோடிக்கு எதிராக அரசியல் லாபி அமைப்பதும், இதுவரையில் டெல்லிக்கு சென்னையிலிருந்து எத்தனை கிலோமீட்டர்? என்று கூட தெரிந்து வைத்திராத ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் ஏற்படுத்தி தருவேன் என்று சொன்னதும் ராகுல் கனவிலும் நினைத்திராத சம்பவங்கள். 

நாயுடு தோளில் ஏறி அமர்ந்து ராகுலை நோக்கி கெக்கேபிக்கேவென சிரிக்க துவங்கிவிட்டார் ஸ்டாலின். ராகுலின் பைஜாமாவை பிடித்தபடி பாவமாய் நிற்கிறார் அரசர், பாவம்!

இனி கூட்டணியில் தி.மு.க. வெச்சதுதான் வரிசை. கமல் கூட போவேன், பா.ம.க.வுக்கு உள் ஒதுக்கீடு தருவேன்னு காங்கிரஸ் போட்ட சீனெல்லாம் நமத்துப் போன பட்டாசாகிவிட்டது பாஸு!
ஹைய்யோ! ஹைய்யோ!