Asianet News TamilAsianet News Tamil

தரைமட்டமாகும் சந்திரபாபு நாயுடு வீடு... துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் ஜெகன் மோகன்..!

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் படுதோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்ததில் இருந்து சந்திரபாபு நாயுடு தூக்கமிழந்து தவிக்கிறார். 

Chandrababu Naidu's house to be demolished
Author
India, First Published Jun 25, 2019, 11:12 AM IST

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் படுதோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்ததில் இருந்து சந்திரபாபு நாயுடு தூக்கமிழந்து தவிக்கிறார். Chandrababu Naidu's house to be demolished

காரணம், அவருக்கெதிராக சமீபத்தில் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து பேரிடியாய்த் தாக்கி வருகிறார். ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஹைதராபாத்தில் கட்சி கூட்டத்தில் பங்கேற்கச் செல்ல விஜயவாடா விமான நிலையத்துக்கு சென்றார். அவருக்கு இசட் ப்ளஸ்பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.Chandrababu Naidu's house to be demolished

எனினும், விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடத்தில் சோதனை நடத்தினர். அதோடு, விமான நிலையத்திலிருந்து உள்ளே சென்று விமானம் ஏற அவருக்குத் தனி வாகனமும் அளிக்கப்படவில்லை. `சார்.. நீங்கள் பொதுமக்களுடன் பேருந்தில் பயணித்துச் செல்லலாம்' என்று கூறிவிட்டனர். வேறு வழியில்லாமல் பயணிகளுடன் பயணிகளாகப் பேருந்தில் பயணித்து விமானம் நிற்கும் இடத்தை அடைந்தார் சந்திரபாபு நாயுடு. இது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. Chandrababu Naidu's house to be demolished

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. அமராவதி நகர் கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திரபாபு நாயுடு கட்டியுள்ள 8 கோடி மதிப்பிலான சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள, மாநாட்டு மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளார் ஜெகன். அதேபோல மக்கள் நலனுக்காக கட்டப்பட்டுள்ள பிரஜா வேதிகா கட்டடமும் இடிக்கப்பட உள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் 'பிரஜா வேதிகா' அரங்கில் நடைபெற்ற மாநாட்டி இது குறித்து பேசிய ஜெகன் மோகன், ’’முந்தைய அரசு கட்டிய, அங்கீகாரமில்லாத கட்டடத்தில் அமர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணா நதிக் கரையோரம் எந்த கட்டடங்களும் கட்டப்படக் கூடாது என, ஒழுங்குமுறை விதிமுறைகள் கூறுகின்றன. அதை மீறி, இந்த பிரமாண்ட கட்டடத்தை, சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய அரசு கட்டியுள்ளது. Chandrababu Naidu's house to be demolished

இந்தக் கட்டடத்தில் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. அந்தக் கூட்டம் தான் இங்கு7 நடக்கும் கடைசி கூட்டமாக இருக்கும்.  அதற்கடுத்து இந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்படும். கிருஷ்ணா நதி கரையோரம் உள்ள அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும். அந்தப் பணிகள், புதன் கிழமை முதல் துவங்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இடிக்கப்பட உள்ள சந்திரபாபு நாயுடுவின் பிரம்மாண்ட பங்களா 8 கோடி ரூபாய் மதிப்புக் கொண்டது. இந்த பங்களாவில் அவ்வப்போது வந்து ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டுள்ள அந்த பங்களா வீடு நாளை தரைமட்டமாகப்போகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios