ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்திஸ்து வழங்க் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அந்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இன்று சைக்கிள் பேரணி சென்றார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு  மாநிலங்களவையில் அறிவித்தார்.  நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால்  சிறப்பு அந்தஸ்து வழக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பாஜகவும்  ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பாஜகவும்,  தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பாஜக  அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடு பல முறை டெல்லி சென்று இது தொடர்பாக மத்திய அரசனை வலியுறுத்தினார். 

இதனால் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக  அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் எம்பிகள் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகியோர் ராஜினாமா செய்தனர். அம்மாநில தெலுங்கு தேச எம்.பி.க்கள் மாநிங்களவை மற்றும் மக்களைவையை நடத்த விடாமல் முடக்கினர். மேலும் தெலுங்கு தேசம் சார்பில் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி மத்திய அரசனை வலியுறுத்தி, ஆந்திர முதலமைச்சர்  சந்திர பாபு நாயுடு தலைமைசெயலகம் நோக்கி பேரணியாக சென்றார். அவருடன் கட்சி தொண்டர்களும் சென்றனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்.