முதல்வர் அதிரடி முடிவு..! 

குஜராத்தில் அமைக்கப்பட்ட படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டிடம் அமைக்க ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு முடிவு செய்து உள்ளார்.

அதன்படி, புதியதாக அமைய உள்ள ஆந்திர தலைநகரான அமராவதியில் உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் படேல் சிலையை (182 மீட்டர்) விட உயரமான சட்டசபை கட்டிடம் அமைக்கப்படும் என நாயுடு தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி எது செய்தாலும் அதை அப்படியே காப்பி அடிப்பதில் முதல்வர்கள் போட்டி போடுகின்றனர். படேல் சிலை விவகாரம் குறித்து வீண் செலவு என பேசினவர்கள் எல்லாம் தற்போது அதை விட மிக உயரிய சிலையை அமைக்க ஆர்வம் காட்டுவது தான் இதில் வியப்பு....

படேல் சிலை திறப்பிற்கு பின், கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க போவதாகவும், ராமருக்கு 201 மீட்டரில் சிலை அமைக்க போவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டசபை கட்டிடம் அமைக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிட திட்டம்

3 மாடிகள் கொண்டது - 2 மாடங்கள் கொண்டது 
80 மீ உயரத்தில் அமைய உள்ள முதல் மாடத்தில் 300 பேர் வரை அமர முடியும்
250 மீ உயரத்தில் 2 ஆவது மேடம் அமைய உள்ளது.
புயல் மற்றும் நிலநடுக்கும் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்காத வண்ணம் இந்த கட்டிடம் அமைக்க பட உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடத்திலிருந்து பார்த்தால் அமராவதி முழுவதும் பார்க்க முடியும் நேர்த்தியில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில மாதங்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டிட பணிகள்  முழுமை அடைய செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கட்டிடம் அமைக்கப்பட்டால் இந்தியாவிலேயே மிக உயரிய சட்டமன்ற கட்டிடம் உள்ள இடம் அமராவதி என்ற பெருமை ஏற்படும். இதிலிருந்து எதிர்கட்சிகள் கூட மோடியை தான் காப்பி அடிகின்றனர் என்பது தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது என பொதுமக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்