Asianet News TamilAsianet News Tamil

பாரபட்சமின்றி சட்டம் பாயும்..வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை..எம்.பி கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் அதிரடி

பெண் குழந்தைகளை வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் எந்தவிதமான பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதலளித்துள்ளார். மேலும்  சினிமா, ஊடகங்களில் வரம்பு மீறி குழந்தைகளை காட்சிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் தண்டனைக்கு உரியது என்று அவர் எச்சரித்துள்ளார்.
 

Central Minister Smriti Irani speech In Lok Shaba
Author
Tamil Nadu, First Published Apr 2, 2022, 12:01 PM IST

பெண் குழந்தைகளை வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் எந்தவிதமான பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதலளித்துள்ளார். மேலும்  சினிமா, ஊடகங்களில் வரம்பு மீறி குழந்தைகளை காட்சிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் தண்டனைக்கு உரியது என்று அவர் எச்சரித்துள்ளார்.

இன்று மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி எழுப்பியக் கேள்வியில், "இணைய தொடர்கள், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் நடிக்கும் பெண் குழந்தைகளில் பலர்,  தங்களை வைத்து எடுக்கப்படுகிற காட்சி பற்றிய புரிதல் இல்லாமலேயே நிர்வாணம் உள்ளிட்ட சில வரம்பு மீறிய காட்சிகளில் நடிக்க வைக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். 

இந்த நிலையில் குழந்தைகளை நடிக்க வைக்கும் போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் தெளிவான வரையறையுடன் கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கிறதா?ஏனென்றால், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கானப் பாதுகாப்பு குறித்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெளிவான ஆலோசனை வழங்கி இருக்கிறதா?" என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,"பெண் குழந்தைகளை நிர்வாணக் காட்சிகள் உள்ளிட்ட வரம்புமீறிய காட்சிகளில் நடிக்க வைத்தல் என்பது போக்சோ சட்டத்தின்படி குற்றம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற காட்சிகளை பரப்புதலும் தடை செய்யப்பட்டது என்றும் போக்சோ சட்டத்தில் கொண்டு வரக் கூடியது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து இவற்றைத் தடுக்க உறுதி பூண்டுள்ளது.

இதுபற்றிய ஆலோசனைகள் என்பதைத் தாண்டி நாங்கள் ஊடக நிறுவனங்களுடன் இது தொடர்பாக தொடர்ந்து உரையாடி வருகிறோம். பெண் குழந்தைகளை வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. இவர்கள் மீது போக்சோ சட்டம் பயன்படுத்தப்படும் என்பதை அரசியல் வேறுபாடுகள் இன்றி இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிலளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios