Asianet News TamilAsianet News Tamil

ஆப்படித்து மொத்தமாக முடக்கிய மத்திய அரசு!! ரிஸ்க் எடுத்தால் கம்பி தான்... நெருக்கடியில் தினறி நிற்கும் தினகரன்...

டி.டி.வி தினகரனுக்கு இதுவரை தடையில்லாமல் வந்து கொண்டிருந்த நிதி ஆதாரங்களை மத்திய அரசு முழுமையாக முடக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Central govt opration against TTV Dinakaran
Author
Chennai, First Published Dec 2, 2018, 5:23 PM IST

கடந்த மாதம் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடைபெற் வருமான வரித்தறை ரெய்டுக்கு பிறகு தான் டி.டி.வி தினகரன் தனது செயல்பாடுகளை மிகவும் வரைமுறைப்படுத்திக் கொண்டார். மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த அவருக்கு எதிரான தீர்ப்பும் கூட தினகரனை தடுமாற வைத்தது.

இந்த நிலையில் டி.டி.வி தினகரன் கட்சியில் கடந்த ஆறு மாதமாக இருந்த பணப்புழக்கம் அப்படியே நின்று போய்விட்டதாக சொல்கிறார்கள். இதுநாள் வரை தனக்கான நிதி ஆதாரமாக இருந்த பல விஷயங்களை கண்காணித்து பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய புலானய்வு குழு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் தினகரனுக்கு உதவும் பலரையும் அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Central govt opration against TTV Dinakaran

இதனால் தான் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்க கூட லோக்கல் கட்சிக்காரர்களை தினகரன் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்கிறார்கள். மேலும் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் கூட அவற்றை வெளியே எடுக்க முடியாத தர்மசங்கடமான சூழலில் தினகரன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் தினகரன் தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் மிக மிக குறைவாக வருவதை கவனிக்கமுடிகிறது.

செலவழிக்காமல் கட்சி நடத்த முடியாது என்பதை உணர்ந்து தான் சில நாட்களுக்கு முன்னர் தனது ஆடிட்டர்களையும், தனது கணக்குகளையும் கவனித்து வரும் பலரையும் அழைத்து தினகரன் பேசிப் பார்த்தார். ஆனால் அனைத்து வழிகளிலும் மத்திய அரசு அதிகாரிகள் கேட் போட்டுள்ளதால் ரிஸ்க் எடுக்க முயன்றாலே சிக்கிக் கொள்ள நேரிடும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர். 

Central govt opration against TTV Dinakaran

இதனால் 20 தொகுதி இடைத்தேர்தலை அறிவித்தால் என்ன செய்வது? டெல்லியில் வழக்கு செலவுக்கு எப்படி தாரளமான செலவழிப்பது என்று தினகரன் யோசித்து விழி பிதுங்கிப் போய் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios