மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தயாநிதி மாறன், அன்பழகன், சுப்பிரமணியன் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழிசை கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதை சுட்டிக்காட்டினார். மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பின்னர் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும் என உறுதியாக கூறுகிறேன் என்றார்.