மத்திய சென்னையில் கெத்து காட்டும் பாகவி..! பீதியில் தயாநிதி மாறன்..!
மத்திய சென்னை தொகுதியில் தினகரன் கூட்டணி சார்பில் போட்டியிடும் sdpi கட்சியின் தெஹ்லான் பாகவி தேர்தல் பணிகளை மிக நேர்த்தியாக செய்து வருகிறார்.
மத்திய சென்னை தொகுதியில் தினகரன் கூட்டணி சார்பில் போட்டியிடும் sdpi கட்சியின் தெஹ்லான் பாகவி தேர்தல் பணிகளை மிக நேர்த்தியாக செய்து வருகிறார்.
தினகரன் கட்சியை யாருமே கண்டுகொள்ளாத நிலையில் முதல் ஆளாகச் சென்று அவருடன் கூட்டணி வைத்தவர் பாகவி. இதனைத் தொடர்ந்து அவரது கட்சிக்கு தினகரன் மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கினார். அடுத்த நாளே sdpi கட்சி அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. தற்போது தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பதவிக்கான தேர்தல் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய சென்னையை பொருத்தவரை திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் களமிறங்கியுள்ளார். இதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக சாம் பால் போட்டியிடுகிறார். போட்டி என்னவோ தயாநிதி மாறனுக்கும் பாமக வேட்பாளருக்கும் இடையே தான் என்பது போன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது. ஆனால் sdpi கட்சியில் பாகவியும் அவர்களுக்கு சளைத்தவர் அல்ல என்பது போல் தேர்தல் பணிகளில் கெத்து காட்டி வருகிறார். மத்திய சென்னைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் வார்டு வாரியாக கணக்கெடுப்பு தற்போதே பூத் கமிட்டி உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பாகவி தரப்பு வெற்றிகரமாக முடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தினம்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பாகவி தரப்பு பொதுமக்களுக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் பிரச்சாரத்தின் போது அந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆட்களே சாலையில் களமிறங்குகின்றனர். இதன்மூலம் போக்குவரத்து காவலர்களின் வேலை மிச்சமாவதுடன் நெரிசல் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடந்து செல்லவும் பாகவி ஆட்கள் உதவுகிறார்கள். இதன் மூலம் அந்தப்பகுதியில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் பாகவி தப்பிக்கிறார்.
இது மட்டுமல்லாமல் தேர்தல் செலவுகளை பொறுத்தவரையும் முக்கிய இரண்டு கட்சிகளுக்கு குறைவில்லாமல் பாகவி செலவு செய்து வருவதாக கூறுகிறார்கள். sdpi கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து மத்திய சென்னையில் குவிந்து இவருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மத்திய சென்னையில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் பாகவி கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
பொதுவாக தமிழகத்தைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி என்பது எப்போதும் திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும். அந்த வகையில் மத்திய சென்னையில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்கு தயாநிதி மாறன் தனக்கு கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் பாரதியின் தேர்தல் பணிகள் மற்றும் பிரசார வியூகம் இஸ்லாமிய வாக்குகளை ஒட்டுமொத்தமாக பறிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் பாமக வேட்பாளருக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் தனக்குக் கிடைக்காமல் தவிக்கும் செல்லும் என்று தயாநிதி மாறன் கருதுவதாக கூறுகிறார்கள். இதனால் சிறுபான்மையின வாக்குகளை குறிவைத்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தயாநிதி மாறன் தரப்பு திட்டம் தீட்டி வருகிறது.