Asianet News TamilAsianet News Tamil

CBSE:பெண் குழந்தைகளை இழிவுப்படுத்திய சிபிஎஸ்இ.. சர்ச்சையை ஏற்படுத்துதே பொழப்பா? மன்னிப்பு கேட்க சொல்லும் TTV.!

வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

CBSE controversial questions... TTV.Dhinakaran condemned
Author
Tamil Nadu, First Published Dec 13, 2021, 1:19 PM IST

பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன் தினம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்வித்தாளில் பிரிவு ஏவில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் இல்வாழ்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது. முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை.

CBSE controversial questions... TTV.Dhinakaran condemned

இதனால் அதை பார்க்கும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுகுறிப்பிற்கு ஒரு தலைப்பை இடுமாறும் ஒரு மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்? வீட்டில் ஒழுக்கம் சீர்கெட் என்ன காரணம், வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலைில், சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

CBSE controversial questions... TTV.Dhinakaran condemned

இது தொடர்பாக அமமுக பொதுச்செலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 

வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios