டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது இல்லத்தில் வைத்து  இன்று இரவு கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தொண்டர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சிதம்பரத்தை சிபிஐ அள்ளிச் சென்றது.

இதனை அடுத்து அவர் சிபிஐ தலைமை  அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் சிபிஐ  அலுவலகத்தில் சிபிஐ இயக்குனர் மேற்பார்வையில் விசாரிக்கப்படுவார் எனவும், நாளை அவர் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுதாகவும் சி.பி.ஐ.,விளக்கம் அளித்துள்ளது. 
சிதம்பரம் நாளை மதியம் வரை சி.பி.ஐ. அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை என்றும், ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சிபிஐ. அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.