நேற்று இரவு டெல்லி ஜோர் பாக்கில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சிபிஐயின் காரில் ஏற்றப்பட்டு  லோதி சாலையில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடக்கத்தில் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சிபிஐ அதிகாரிகள்  அதை செய்யாமல் அந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழுவை சிபிஐ அலுவலத்துக்கே வரவழைத்து பரிசோதனை நடத்தினர்,

73 வயதாகும் சிதம்பரத்துக்கு  மருத்துவர்கள் முதலில் ரத்த அழுத்த சோதனை செய்தனர். பின் சார் சுகர் இருக்கா என்று கேட்டனர்.  அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார் சிதம்பரம்.

சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள சிபிஐ கெஸ்ட் அவுஸில் 5 ஆம் எண் கொண்ட சூட் அறையில் சிதம்பரம் தங்க வைக்கப்பட்டார்.  இரவு உணவாக ஒரே ஒரு டீ மட்டும் போதும் என்று சிதம்பரம் தெரிவித்தால் அவருக்கு டீ மட்டும் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஐ.என்.எக்ஸ்.வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளும்  மற்றும்  சிபிஐ உயரதிகாரிகளும் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது நான் சட்டத்தை மதிக்கிறேன். நீங்களும் சட்டத்தை மதிப்பீங்கனு நம்பினேன்’ என்று சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து  விரக்தியாக சிதம்பரம் தெரிவித்தார்.

பின்னர் என்னை எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகிறீர்கள்?’ என்று கேட்டார் சிதம்பரம். அதற்கு பதிலளித்த அதிகாரிகள்  நாளைக்குதான் உங்களை ஆஜர்படுத்த சொல்லியிருக்கிறார்கள்’ என்றபடியே சில கேள்விகளார் ளைத்தெடுக்கத் தொடங்கினர்.

இதையடுத்து தொடர்ந்து பல மணி நேரங்கள் சிதம்பரத்திடம் விசாரணை செய்ததாகவும் அதன் பின்னரே அவருக்கு ரெஸ்ட் கொடுத்தாகவும் சிபிஐ வட்டாங்களில் சொல்லப்படுகிறது.