நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணி மண்ணைக் கவ்வியது, அதிலும் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் கும்மாங்குத்து வாங்கியது. இதற்கு காரணமே பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுமையால் அதல பாதாளத்தில் சரிந்த அதிமுக செல்வாக்கு தான்.

அதிமுக கூட்டணியில் 5 சீட் வாங்கிய பிஜேபி, கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தொகுதியான கோவையில்  பிஜேபி வேட்பாளராக போட்டியிட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.கடந்த முறை 2014 தேர்தலில், பாமக தேமுதிக போன்ற சின்ன கட்சிகளோடு களமிறங்கிய அவர் வெறும் 50000 வாக்கு வித்தியாசத்தில், திமுகவை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்திற்கு வந்தார்.

அப்படிப்பட்ட பிஜேபி வேட்பாளரை கொங்கு மண்டலத்தில் வலுவான வாக்கு வங்கி வைத்தருக்கும் அதிமுகவோடு கூட்டு சேர்ந்ததால்  இந்த முறை ஜெயிச்சிடலாம்னு பிளான் போட்டவருக்கு, தேர்தல்முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் கடந்தமுறை மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக வென்றது தான்.

அதுமட்டுமல்ல, கடந்தமுறை அதிமுக துணை இல்லாமல் வாங்கிய வாக்குகளைவிட இந்த முறை 10 ஆயிரம் வாக்குகள் குறைந்திருப்பது. அதிமுக முக்கிய புள்ளிகள் தனக்காக வேலை பார்க்கததும் அமைச்சர் வேலுமணியோட உள்குத்து காரணமாகத்தான் நான் தோற்றதாக பிஜேபி மேலிடத்தில் சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக முக்கிய புள்ளிகள், பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுமையால் சரிந்த அதிமுக செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனோடு சேர்ந்து, வேலுமணி கவனம் செலுத்தியிருக்கிறார். பொள்ளாச்சி வேட்பாளர் மகேந்திரனுக்கு காட்டிய அக்கறையை, தனக்கு வேலுமணி காட்டவில்லை என புலம்பியிருக்கிறார். இதுபோக, இடைத்தேர்தலில் ஜெயிக்க மட்டுமே மெனக்கெட்ட வேலுமணி, கோவை தொகுதியை அலட்சியத்தால் தோற்கடித்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர் லோக்கல் பிஜேபியினர்.