Asianet News TamilAsianet News Tamil

திட்டமிட்டே பூனையை இந்தியாவுக்கு அனுப்பியது அம்பலம்..!! மீண்டும் சீனாவுக்கே பூனையை திருப்பி அனுப்ப திட்டம்.

இந்நிலையில் பூனையை அனுப்பியது யார் ,  என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது . கப்பலில் வந்த பூனையை மீண்டும் சீனாவுக்கு கப்பலில் அனுப்ப துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . 

cat send by china with fully planed ,  cat will send to return to china
Author
Chennai, First Published Mar 6, 2020, 7:43 PM IST

சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது .  இந்நிலையில் பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .  இதில் கடந்த மாதம் சீனாவில் இருந்து வந்த கப்பலில்  பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு வந்திருந்தது  தெரியவந்தது . 

cat send by china with fully planed ,  cat will send to return to china

சென்னை துறைமுகத்தில் கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும்போது பூனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .  இதனால் அதிர்ச்சி அடைந்த துறைமுக அதிகாரிகள் உடனே சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் . அப்போது அவர்கள் விரைந்து சென்று பூனைக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர் .  இதில் அந்தப் பூனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது .  இருந்தாலும் பூனையைக் கடந்த சில தினங்களாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர் .  இந்நிலையில் பூனையை கூண்டில் அடைத்து திட்டமிட்டு கண்டெய்னரில் வைத்து அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . 

cat send by china with fully planed ,  cat will send to return to china 

இந்நிலையில் பூனையை அனுப்பியது யார் ,  என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது .  கப்பலில் வந்த பூனையை மீண்டும் சீனாவுக்கு கப்பலில் அனுப்ப துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .  வெளிநாடுகளிலிருந்து கண்டெய்னரில் விலங்குகள் உயிருடன் வந்தால் 3 நாட்கள்வரை  யாரும் உரிமை கோர விட்டால் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்பது விதி ,  இதன்படியே சீனாவுக்கு பூனை திருப்பி அனுப்பப்பட உள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios