நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்கிறோம்.. ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்..!
தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.
தரமற்ற பாலை விற்பதாக கூறிய தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு கோடி மானநஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை மூன்று தனியார் பால் நிறுவனங்கள் திரும்பப் பெற்றன.
தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதையும் படிங்க;- தமிழகத்தை விட்டு வெளியே செல்ல கூடாது… ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!!
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேச ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். இதன்பின்னர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சனையில் நீதிமன்றத்துக்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருப்பதாக பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே சமசரம் ஏற்பட்டுவிட்டதால் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பால் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் UPSஐ தேடுகிறார்கள்.. சீனாக சீனுக்கு வரும் ராஜேந்திர பாலாஜி.!