Asianet News TamilAsianet News Tamil

சமூக ஊடகங்களில் கறுப்பர் கூட்டம்-இந்து அமைப்புகள் விவகாரம்... பேஸ்புக்கில் பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது!

“கருப்பர் கூட்டத்தின் பின்னால் இயங்கும் இஸ்லாமிய கும்பலை இஸ்லாமிய தலைவர்களே முன் வந்து கண்டிக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இந்த ஹிந்து துவேஷ கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு தாங்கள் ஹிந்துக்களின் பக்கம் நிற்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கருப்பர் கூட்டம் சேனலுக்கு பின்னால் இயங்கும் ஹாசிப் முகமதுவை அத்தனை ஜமாத்களும் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவிக்க வேண்டும். அதுவும் எண்ணி 24 மணி நேரத்தில் இதை செய்ய வேண்டும்."
 

Cartonist varma arrest in villupuram
Author
Villupuram, First Published Jul 14, 2020, 8:29 AM IST

கறுப்பர் கூட்டம் - இந்து அமைப்புகள் விவகாரம் சமூக ஊடங்களில் சர்ச்சையகிவரும் நிலையில், அதுதொடர்பாக பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது செய்யப்பட்டார். Cartonist varma arrest in villupuram
‘கறுப்பர் கூட்டம்’ பற்றி பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் பேசியபிறகு, இதுதொடர்பான சர்ச்சைகள் சமூக ஊடங்களில் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே ‘கந்த சஷ்டி’  வீடியோ காட்சி இந்து அமைப்புகளை கோபத்தில் தள்ளியது. அந்த வீடியோவுக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கார்டூனிஸ்ட் வர்மா ஃபேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலைப் பதிவிட்டார்.Cartonist varma arrest in villupuram
அதில், “கருப்பர் கூட்டத்தின் பின்னால் இயங்கும் இஸ்லாமிய கும்பலை இஸ்லாமிய தலைவர்களே முன் வந்து கண்டிக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இந்த ஹிந்து துவேஷ கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு தாங்கள் ஹிந்துக்களின் பக்கம் நிற்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கருப்பர் கூட்டம் சேனலுக்கு பின்னால் இயங்கும் ஹாசிப் முகமதுவை அத்தனை ஜமாத்களும் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவிக்க வேண்டும். அதுவும் எண்ணி 24 மணி நேரத்தில் இதை செய்ய வேண்டும்.

Cartonist varma arrest in villupuram
இல்லை என்றால்? முகமது நபியைப் பற்றிய கார்ட்டூன் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும். இதனால் ஏற்படும் ஹிந்து,முஸ்லீம் பிரச்சனைக்கு முழுக்க முழுக்க தி.க, திமுக, இஸ்லாமிய கும்பலே முழுமையாக பொறுப்பாகும்.” என்று வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தின. இதுதொடர்பாக கார்ட்டூனிஸ்ட் வர்மா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் கார்ட்டூனிஸ்ட் வர்மாவை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே கறுப்பர் கூட்டத்துக்கு எதிராகவும் போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios