நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தி.மு.க. முன்னாள் சேர்மனும், வழக்கறிஞருமான சையத் இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் திமுகவைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் (50). இவர் பள்ளப்பட்டி தி.மு.க. முன்னாள் சேர்மனாக பதவி வகித்தவர். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு காரில் சேலத்திலிருந்து கரூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது நல்லிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மீது கார் மோதியது.

 

இந்த விபத்தில் திமுக வழக்கறிஞர் சையத் இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சையத் இப்ராஹிம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விபத்துக்கு காரணமான லாரி நிற்காமல் சென்று விட்டது. இது தொடர்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து கீரம்பூர் சுங்கசாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.