Asianet News TamilAsianet News Tamil

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அமரீந்தர் சிங்.. பாஜகவில் இணைகிறாரா? அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு உச்சத்தை எட்டியது. இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

Captain joining BJP? Amarinder Singh meets Amit Shah
Author
Delhi, First Published Sep 29, 2021, 7:39 PM IST

பஞ்சாப் முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திப்பிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு உச்சத்தை எட்டியது. இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அமரீந்தர் சிங்;-  நான் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன். காங்கிரஸ் கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும். இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வேன்' என்றார்.

Captain joining BJP? Amarinder Singh meets Amit Shah

இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர்களாக 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். 

Captain joining BJP? Amarinder Singh meets Amit Shah

பஞ்சாப் அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் டெல்லி சென்றுள்ள அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்துள்ளார். இதனையடுத்து, அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios