தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தான் முதல்வராக சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகபாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சேலம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் உரையாற்றிய எல்.முருகன்;- தமிழகத்தில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை தடையையும் மீறி பொது மக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். பாஜக பலவீனமாக உள்ள மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்தி முடிக்கப்பட்டதால் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அச்சம்  அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளரை முதலமைச்சராக வேண்டும். தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.