வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். புதிய நீதி கட்சி தலைவராக இருக்கும் அவர்ம் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதத்தை கொடுக்கவில்லை. வேட்புமனு பரிசீலனை நாளான இன்று அவரது வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

அவரது மனுவை ஏற்கக்கூடாது என எதிர்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அவர் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதத்தை கொடுத்தால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த முறை வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டபோது கதறி கதறி அழுதார் ஏ.சி.சண்முகம். அதே போன்ற நிலை மீண்டும் வரக்கூடாது என்பதால் தனது செயல்பாடுகளில் கவனமாக இருந்து வருகிறார் ஏ.சி.சண்முகம்.