Asianet News TamilAsianet News Tamil

மின் மற்றும் குடிநீர் கட்டணம் ரத்து.. முதல்வராக பதவியேற்றவுடன் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பெருந்தொற்று இந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், மக்கள் சுமையை குறைக்கும் வகையில் முதல்வராக பதவி ஏற்றவுடன் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

Cancellation of electricity and drinking water charges .. Action announcement after taking office as the Chief Minister ..!
Author
Kerala, First Published May 7, 2021, 11:27 AM IST

கொரோனா பெருந்தொற்று இந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், மக்கள் சுமையை குறைக்கும் வகையில் முதல்வராக பதவி ஏற்றவுடன் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.Cancellation of electricity and drinking water charges .. Action announcement after taking office as the Chief Minister ..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கேரளாவிலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதற்காக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 Cancellation of electricity and drinking water charges .. Action announcement after taking office as the Chief Minister ..!

மேலும் அங்கு மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கிட்டதட்ட 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, மின் வாரியம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பது இரண்டு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios