அன்புமணி ராமதாஸிடம் வாதிடும் திறமை, தமிழகத்தில் எந்த தலைவருக்கும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

ராமதாஸின் 80-வது பிறந்த நாளை, அக்கட்சியினர் முத்துவிழாவாக தமிழகம் எங்கும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம், கிழக்கு மாவட்ட பாமகவினர் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட ராமதாஸ் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டிவனம், காந்தி சிலை அருகே நடைபெற்றது.

 

இதில் பங்கேற்று பேசிய ராமதாஸ், பாமகவின் கொள்கைகளை போன்று, இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும், வலுவான கொள்கைகள் இல்லை. ஆட்சிக்கு வராவிட்டாலும் எந்தவித சோர்வும் இன்றி, தொண்டர்கள் அணிவகுத்து நிற்கும் கட்சி, இந்தியாவிலேயே பாமக மட்டும் தான். மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸிடம் வாதிடும் திறமை, தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் இல்லை’’ என்ன அவர் கூறியுள்ளார்.  

அவர் தனது மகனுக்கு மட்டுமே தமிழகத்தில் திறமையாக வாதிடும் பக்குவம் உண்டு என கூறியிருப்பதால், பாமக கூட்டணியில் உள்ள அதிமுக, உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ராமதாஸ் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.