Asianet News TamilAsianet News Tamil

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்...!!! உச்சநீதி மன்றம் அதிரடி...!!!

அதேபோல் அங்கு இந்து கோவில் கட்டடமும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.  அங்கு ஆரம்ப காலத்தில்  இந்து கோவிலோ அல்லது மசூதியோ இருந்ததற்கான ஆதாரங்கள் தொல்லியல் துறை ஆய்வில் தெரியவரவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர்  மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும்,  சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று அனுமதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 

can build ramar temple at ayothi suprem court verdict
Author
Delhi, First Published Nov 9, 2019, 11:26 AM IST

பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை, வேறொரு கட்டிடத்தை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப் பட்டுள்ளது, அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் உள்ள கட்டிடம் இஸ்லாமியர் கட்டட பாணியிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் அங்கு இந்து கோவில் கட்டடமும் இருந்த தற்கான சான்றுகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.  அங்கு ஆரம்ப காலத்தில்  இந்து கோவிலோ அல்லது மசூதியோ இருந்ததற்கான ஆதாரங்கள் தொல்லியல் துறை ஆய்வில் தெரியவரவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர்  மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியக தீர்ப்பு வழங்கி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி பகுதியில் சுமார் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. இது தொடர்பாக ஆரம்பத்தில் பல ஆண்டுகளாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது... 
ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை.

can build ramar temple at ayothi suprem court verdict

அதைத் தொடர்ந்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் வொவ்ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதி குறித்து 

இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை இறுதியில் வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது... இதனையடுத்து அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து,கடந்த  40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று 5  நீதிபதிகள் தீர்ப்பு வாசித்தனர் அதில், ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது  அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும்  ஒரே மாதிரியான தீர்ப்பு எனவும் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.  ஒரு மதத்தினரின் மத நம்பிக்கை மற்ற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது எனவும்  தலைமை நீதிபதி  தெரிவித்தார்.   இந்த  நிலையில். 

can build ramar temple at ayothi suprem court verdict

நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன் பாபர் மசூதி கட்டப்பட்டதற்கு முன் இஸ்லாமிய கட்டிடங்கள் அங்கு எதுவும் இல்லை எனவும், மசூதிக்கு கீழ் உள்ள கட்டிடம் இஸ்லாமிய பாணியில் இல்லை என்றும்  நீதிபதிகள் தீர்ப்பில் வாசித்தனர்.    பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை, வேறொரு கட்டிடத்தை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப் பட்டது என்றனர், அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் உள்ள கட்டிடம் இஸ்லாமியர் கட்டட பாணியிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.   அதேபோல் அங்கு இந்து கோவில் கட்டடமும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.  அங்கு ஆரம்ப காலத்தில்  இந்து கோவிலோ அல்லது மசூதியோ இருந்ததற்கான ஆதாரங்கள் தொல்லியல் துறை ஆய்வில் தெரியவரவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர்  மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும்,  சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று அனுமதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios