பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுடன் அரசியல்வாதிகள் எடுத்த புகைப்படங்களை நீக்க முகநூல் நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 10-ம் தேதி மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்று அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய விங் கமாண்டர் 60 மணி நேரத்தில் பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் இந்தியா திரும்பியது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அபிநந்தனை சந்தித்து நலம் விசாரித்ததோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களை சமுக வவைதளங்களிலும் பதிவேற்றினர். 

இந்நிலையில் தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளதால், இந்த புகைப்படங்கள் மூலம் அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடலாம் என தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முகலூலில் அபிநந்தனுடன் அரசியல் தலைவர்கள் எடுத்து பதிவிட்டுள்ள புகைப்படங்களை அகற்ற அந்நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.