விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் திறந்தநிலை அரங்கத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அரங்கத்துக்குள் 3000 முதல் 4000 பேர் வரை திரண்ட நிலையில், வெளியே சுமார் 2000 பேர் திரண்டிருந்தனர். 15 அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தடபுடலாக பிரியாணி விருந்தும் பரிமாறப்பட்டது. 

எடப்பாடி பழனிச்சாமியிடம் தன்னுடைய கோட்டையான விழுப்புரத்தில், தனக்கான மாஸ் என்ன என காட்ட, தனது ஆதரவாளரை இறக்கிய சிவி சண்முகம் பிரசாரத்தை அசத்தலாக தொடங்கிவிட்டார். 

இந்த கூட்டத்தில் திமுகவையும், பொன்முடியையும் தாறுமாறாக தாளித்து எடுத்த அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பித்த அவர், கடந்த சில வருடங்களாக செலவு மட்டுமே செய்து மண்டை காய்ச்சலில் இருக்கும் திமுக  நிர்வாகிகளை கண்டுபிடித்து தூக்க ஒரு டீமை ரெடி பண்ணிவிட்டாராம். அடுத்ததாக பொன்முடியை பிடிக்காதவங்ககளை ரகசியமாக கவனிக்க ஒரு டீம் ரெடியாம்.

பொன்முடியை பிடிக்காத அந்த குரூப்பை அலேக்காக தூக்கி அவங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுக்கவும்,  அவங்களை தேர்தல் வேலை பாக்காம அவங்களை ஆஃப் பண்ண பக்கா ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளாராம். 

இதைவிட பயங்கரம் என்னன்னா? வெளியூர்லேர்ந்து தேர்தல் வேலைக்கு வர்ற திமுக புள்ளிகளையும் செமத்தியாக கவனிக்க ஒரு டீமை ரெடி பண்ணியுள்ளாராம். விக்கிரவாண்டியில்ஜெயிச்சே ஆகணும், ஒருபக்கம் பொன்முடி, இன்னொரு பக்கம் ஓபிஎஸ், இதற்கு நடுவில் எடப்பாடி நம்பிக்கை என எலக்ஷன் களத்தை அலறவிட பயங்கர பிளானோடு தொகுதியை சுற்றிவரும் அமைச்சர். சிவியின் பிளானை தெரிந்து கொண்ட பொன்முடி அண்ட் கேங் 2011, 2016 தேர்தலில் நடந்த சம்பவத்தை நினைத்து  கதிகலங்கி கிடக்கிறதாம்.