Asianet News TamilAsianet News Tamil

இடைத்தேர்தலில் முதலமைச்சரின் முதல் மனைவி போட்டி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Byelection...Kumaraswamy may field wife Anitha Ramanagara constituency
Author
Karnataka, First Published Oct 4, 2018, 5:13 PM IST

கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Byelection...Kumaraswamy may field wife Anitha Ramanagara constituency

கர்நாடகாவில் மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பெற்றது. முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றார். முதல்வராக உள்ள குமாரசாமி ராமனகாரா மற்றும் சென்னபட்டினம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஒரு தொகுதியில் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். Byelection...Kumaraswamy may field wife Anitha Ramanagara constituency

அவர் சென்னபட்டினம் எம்.எல்.ஏ., பதவியில் நீடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். ராமனகாரா தொகுதியில் குமாரசாமி பல முறை வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கு உள்ளது. எனவே, அத்தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டார். அங்கு விரைவில் இந்த ஆண்டு இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதில் குமாரசாமி மனைவி அனிதா போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. Byelection...Kumaraswamy may field wife Anitha Ramanagara constituency

ஏற்கனவே மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, சென்னபட்டினம் தொகுதியில் போட்டியிட அனிதா தீவிரமாக முயற்சித்தார். ஆனால் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை, ' அப்பா - மகன்' கட்சி என விமர்சனம் செய்து வருகின்றனர். அக்கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக குற்றசாட்டு உள்ளது. என காரணம் காட்டி மருமகள் அனிதாவிற்கு சீட்டு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios