By-election in April rknakar !! - EC project !!!
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் எனவும் தேர்தல் தேதி சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றிந்தபோது ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவேல் எம்.எல்.ஏவாக இருந்தார். பின்னர், அந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதால் 2015 ஆம் ஆண்டு வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவிற்கு என எழுதிவைக்கப்பட்ட தொகுதி என்றே சொல்லலாம்.
கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் ஜெயலலிதா இறந்ததில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
இந்நிலையில், அதிமுக மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது. ஆர்.கேநகர் தொகுதிக்கு அதிமுகவிலேயே மூன்று அணி போட்டி போட்டு வருகிறது. இதில் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் வேறு அவரவர் பங்குக்கு நிற்கின்றன.
சசிகலா தரப்பிலிருந்து பிரிந்து வந்த ஓ.பி.எஸ் ஆர்.கே.நகர் தொகுதியில் நிற்பதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் நிச்சயமாக ஆர்.கே.நகர் தொகுதியில் நிற்பேன் என அறிவித்துள்ளார். சசிகலா தரப்பிலும் நிற்பார்கள்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதி சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுத்திருந்து பாப்போம் யார் வெற்றி பெறுவார்கள் என்று....
