தமிழகத்தில் துவங்குகிறது பேருந்து சேவை... விதிமுறைகளை அறிவித்த போக்குவரத்துத் துறை..ஊரடங்கில் குஷியான செய்தி.!
தமிழகத்தில் மே மாதம் 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மே. 4-ம் தேதி முதல் சென்னையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மே மாதம் 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மே. 4-ம் தேதி முதல் சென்னையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மே 4-ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அனைத்து பணியாளர்களும் முக கவசம் அணிந்து வரவேண்டும். மணிக்கு ஒரு முறை தங்களது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அவரவர் பயன்படுத்தும் பொருட்களை அதாவது டேபிள் சேர், கம்ப்யூட்டர், மவுஸ், கீ போர்டு, ஸ்டேரிங் வீல், கேஷ் பேக், டூல்ஸ் உள்ளிட்டவற்றை அவரவர்களே தங்களது பணி நேரத்தில் இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பணி முடித்து போகும்போது அவரவர் பயன்படுத்திய பொருட்களை சுத்தம் செய்திட வேண்டும். காய்ச்சல் மற்றும் தொண்டை சம்பதமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அவரவர் பணியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் arogya setu app டவுன்லோட் செய்திட வேண்டும். அதன்படி குரல் அதற்கு அருகில் கண்டறியப்பட்டால் 104 தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நடத்துனர்- ஓட்டுனர்களுக்கான விதிமுறைகள்:-
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். நடத்துனர் டிக்கெட் வழங்கும்போது ஈரப்பசை தண்ணீர் ஸ்பாஞ்ச் மட்டும் பயன்படுத்த வேண்டும். பேருந்தை பணி தொடங்கும் முன் பேருந்து டிசின்பெக்சன் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே இயங்க வேண்டும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒவ்வொரு நடை முடிவின் போதும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் கதவுகள் உள்ள பேருந்துகளில் கதவுகளை மூடி மட்டுமே பேருந்துகள் இயக்க வேண்டும்.
கிளை மேலாளர் -பிரிவு மேலாளர் மற்றும் பேருந்து நிலைய பொறுப்பாளர்கள் கவனத்திற்கு...
அனைத்து பணிகளிலும் தினசரி தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தடத்தில் அனுப்புவதை உறுதி செய்த வேண்டும். அனைத்து கிளைகளிலும் கை கழுவும் இடங்களில் சோப் மற்றும் தண்ணீர் உள்ளவற்றை உறுதி செய்திட வேண்டும். அனைத்து பணிமனை வாயிலில் சானிடைசர் மற்றும் சோப்பு கரைசல்கள் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பணிமனை நுழைவுவாயிலில் வழிமுறைகள் வரும் பணியாளர்கள் காய்ச்சல் மற்றும் சம்பந்தமான அறிகுறிகள் உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது. பணிமனைகளில் டிசின்பெக்சன் சொலுசன் தேவையான அளவு இருப்பு இருப்பதை அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பணிகளிலும் உள்ள கண்ட்ரோல் செக்சன் ரெஸ்ட் ரூம், கேண்டின் மற்றும் இடிபி செக்சன்களை கிருமிநாசினி கொண்டு தினசரி சுத்தம் செய்திட வேண்டும். பணிமனை அனைத்து இடங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் தினம் செலுத்திட வேண்டும்’’ என போக்குவரத்துதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 303 பேர் கொரோனாவால் இங்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.