Asianet News TamilAsianet News Tamil

பஸ் கட்டணம் உயருகிறது..? போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய தகவல்..!

அதிமுக அரசால் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளோம். 31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளது.

Bus fare is rising ..? Transport Minister Rajakannappan important information
Author
Tamil Nadu, First Published Jun 29, 2021, 5:26 PM IST

27 மாவட்டங்களில் நேற்று மட்டும் 22 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் தெளிவுரையுடன் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுகுறித்து கூறுகையில், ‘’நேற்று முதல் நாள் என்பதால் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

Bus fare is rising ..? Transport Minister Rajakannappan important information

அதிமுக அரசால் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளோம். 31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளது. இயக்கப்படும் பேருந்துகளில் 6262 பேருந்துகள் மட்டுமே சாதாரண பேருந்துகள். மகளிருக்காகவும் டிக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்துகளிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

Bus fare is rising ..? Transport Minister Rajakannappan important information

நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள் மற்றும் 2000 டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. எரிபொருட்களின் விலைகள் உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயராது” என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios