தமிழகத்தில் பேருந்து கட்டணத்தின் விலை உயர்த்தப்படமாட்டாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து விதிகளை மீறிபவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் வசூலிக்கும் முறை திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தலைகவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

 

செங்கல்பட்டு முதல் திருச்சி வரை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு தானாகவே அபராதம் விதிக்கக் கூடிய வகையில் கேமராவுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். பால் கட்டணம் உயர்ந்ததை போல், பேருந்து கட்டணம் உயராது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.