Asianet News TamilAsianet News Tamil

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவ வேண்டும்... அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை..!

அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

build Rainwater Harvesting...sp velumani
Author
Tamil Nadu, First Published Aug 19, 2019, 6:02 PM IST

அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

சென்னை ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் செய்முறை கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் மறுசுழற்சி வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார். build Rainwater Harvesting...sp velumani

மேலும், வீடுகள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபகங்கள், திரையரங்குகள் என அனைத்து விதமான கட்டடங்களிலும் அழை நீர் சேகரிப்பை அமைக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி வலியுறுத்தியுள்ளார். தொழில் நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மையத்தை அமைக்க 6 மாத கால அவகாசம் கேட்ட நிலையில், தமிழக அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.  build Rainwater Harvesting...sp velumani

அவ்வாறு செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் மறுசுழற்சி வசதிகள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios