மத்திய  அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார்.

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. 

இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. 

நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.