Asianet News TamilAsianet News Tamil

சடலங்களை எரிக்க லஞ்சம்.. புகார் செய்ய இதோ இலவச எண்.. சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மயானங்களில் இறந்தவர்களின் உடலை தகனம் அல்லது அடக்கம் ஆகிய முறைகளில் நல்லடக்கம் செய்யும் பணிகள் இலவசமாக மேற்கொண்டு வருகின்றன.  

Bribe to burn corpses .. Here is the free number to complain .. Chennai Corporation Commissioner's order.
Author
Chennai, First Published May 20, 2021, 10:53 AM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மயான பூமிகளில் இறந்தவர்களை புதைத்தல் மற்றும் தகனம் செய்தலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது தொடர்பாக புகார்களை 044- 25 384 520 என்ற எண்ணிலும் 94 98 346 900 என்ற வாட்ஸ்அப் என்னிலும் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று மேலாண்மையின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களை மிகவும் கண்ணியமாக அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

Bribe to burn corpses .. Here is the free number to complain .. Chennai Corporation Commissioner's order.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மயானங்களில் இறந்தவர்களின் உடலை தகனம் அல்லது அடக்கம் ஆகிய முறைகளில் நல்லடக்கம் செய்யும் பணிகள் இலவசமாக மேற்கொண்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 இடங்களில் மயான பூமிகள் செயல்பட்டு வருகின்றன, இவற்றில் 37 இடங்களில் 41 எரிவாயு மற்றும் மின் தகன மேடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இறந்தவர்களின் உடலை மருத்துவமனையிலிருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அரசின் சார்பில் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155 377 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை இடத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாநகராட்சிக்குட்பட்ட மயானங்கள் நேரடியாக வீடியோ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மயானங்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் இது குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Bribe to burn corpses .. Here is the free number to complain .. Chennai Corporation Commissioner's order.

மேலும் மயான பூமிகள் மற்றும் அங்குள்ள மேடைகளில் செயல்பாடுகள் தலைமை பொறியாளர் அவர்களின் மேற்பார்வையில் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான பராமரிப்பு பணிகள் குறித்து திட்டமிடுதல் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மருத்துவமனைகளிலிருந்து, இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லவோ அல்லது மயானங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு யாரேனும் பணம் கேட்டால், மயானங்களில் சேவை குறைபாடு இருந்தாலும் அது குறித்த புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை இடத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை எண் 044 2538 4520 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், மேலும் இது தொடர்பான புகார்கள் குறித்து தகவல்கள் மற்றும் வீடியோ பதிவுகளை 94 983 46900  என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios